#NZvsAUS டி 20 போட்டி – நியூஸிலாந்து அசத்தல் வெற்றி!!

0

தற்போது நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களது டி 20 போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலிய அணி தற்போது நியூஸிலாந்துக்கு போட்டிகளை விளையாடுவதற்காக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. தற்போது இந்த இரு அணிகளும் தங்களது டி 20 போட்டிகளை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி சொதப்பினர். ஆனால் அந்த அணியின் பேட்ஸ்மேன் கான்வே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 184 ரன்களை குவித்தது. கான்வே 99 ரன்கள் குவித்து ஆட்டமிழகலாம் இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபம் ஏற்றுங்கள்’ – கட்சியினருக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம்!!

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. மேலும் இவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி திணறி வந்தது. வேட் 12, பின்ச் 1, பிலிப் 2, மார்ஸ் 45, மக்ஸ்வெல் 1, ஸ்டோனிஸ் 8, அகர் 23, சம்ஸ் 1, கேன் ரிச்சர்ட்சன் 1, சை ரிச்சர்ட்சன் 11 ஆட்டமிழந்து ஏமாற்றினர். தற்போது 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்னுக்கு சுருண்டது. முடிவில் நியூஸிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here