#TNvsAP விஜய் ஹசாரே தொடர் – அஸ்வின் அசத்தல் சதம்! ஆந்திரா அதிரடி வெற்றி!!

0

தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆந்திர அணி சிறப்பாக தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

தமிழ்நாடு vs ஆந்திரா:

தற்போது இந்தியாவில் உள்ளூர் விஜய் ஹசாரே ட்ராபி தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் ஆந்திர அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி தமிழ்நாடு அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். 41.3 ஓவர் முடிவில் தமிழ்நாடு அணி 176 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆந்திர அணி தரப்பில் ஸ்டீபன் மற்றும் கான் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#NZvsAUS டி 20 போட்டி – நியூஸிலாந்து அசத்தல் வெற்றி!!

எளிதான இலக்கை துரத்திய ஆந்திர அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் குமார் 14 ஏமாற்றினார். இவரை தொடர்ந்து கரண் 0, விஹாரி 2 ஏமாற்றினர். இந்நிலையில் அஸ்வின் ஹெப்பர் மற்றும் ரிக்கி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வந்தனர். முடிவில் ஆந்திரா அணி 3 விக்கெட்டை இழந்து 181 ரன்களை குவித்து தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஆந்திரா அணி தரப்பில் அஸ்வின் ஹெப்பர் சதம் அடித்து அசத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here