சர்வதேச விமான பயணம் செய்வோருக்கு புதிய நெறிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
airports authority of india released recruitment notification

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சத்தின் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு இந்தியா புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த நெறிமுறைகள் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழிகாட்டும் நெறிமுறைகள்:

தற்போது பிரிட்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகமாகி இருப்பதன் காரணமாக இந்தியா சர்வதேச பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொவோர் டெல்லி விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றுகளை பதிவேற்றவேண்டும். அந்த பரிசோதனையானது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அலட்சியம் – ‘பிப்ரவரி 30’ என வாரிசு சான்றிதல் வழங்கிய வட்டாட்சியர்!!

மேலும், ” தென்னாபிரிக்கா, பிரிட்டன், மற்றும் பிரேசில் வழியாக பயணம் செய்து வருவோர் தனியாக அமரவைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் முன் பரிசோதனை கட்டாயமாக செய்யப்படவேண்டும். பரிசோதனையின் முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தால் அவர்கள் 14 நாட்கள் தமிமைப்படுத்தப்படுவர். கொரோனா பாதிப்பு உறுதியானால் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் இந்த விதி முறைகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here