தமிழகத்தில் சொத்து கிரைய பத்திரத்தில் புதிய நடைமுறை., ரூ.1,000 கொடுத்தால் ரத்து? ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் சொத்து கிரைய பத்திரத்தில் புதிய நடைமுறை., ரூ.1,000 கொடுத்தால் ரத்து? ஜாக்பாட் அறிவிப்பு!!!
சமீபகாலமாக தமிழக அரசின் பத்திரப்பதிவு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரைய பத்திரம் ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது ஒரு சொத்தை கிரைய பத்திரம் செய்வதற்கு சொத்தின் மதிப்பில் 9 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த சொத்தை ஏதேனும் காரணங்களால் ரத்து செய்ய விரும்பினால், மீண்டும் கிரயம் செய்ய வேண்டி வரும்.
இதனால் அலைச்சல் மற்றும் செலவுகள் அதிகமாக இருப்பதால் பலரும் கவலை தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில் கிரைய பத்திரத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரூ.1,000 மட்டுமே கட்டணம் செலுத்தி கிரைய பத்திரத்தை ரத்து செய்யலாம். இதன் மூலம் சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கே மீண்டும் சொத்து சென்று விடும் என தெரிவித்துள்ளனர். இது இடம், சொத்து வாங்குபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here