அதிகாரிகள் அலட்சியம் – ‘பிப்ரவரி 30’ என வாரிசு சான்றிதல் வழங்கிய வட்டாட்சியர்!!

0

விருதுநகரை சேர்ந்த ராஜபாளையம் பகுதி வட்டாட்சியர் ஒருவர் நாட்காட்டியிலேயே இல்லாத தேதியான பிப்ரவரி 30ம் தேதி என, கூலி தொழிலாளி ஒருவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

பிப்ரவரி 30 என வாரிசு சான்றிதல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், பேயம்பட்டி ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி என்பவர் 2000ம் ஆண்டு இறந்துள்ளார். அவருக்கு இறப்பு சான்றிதழ் ஏதும் பெறப்படாத நிலையில், இறந்தவரின் மகனுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக அழகர்சாமியின் மகன் குமாரசாமி என்பவர், கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு மேலராஜகுலராமன் ஊராட்சி பதிவேட்டிலிருந்து தகவல்கள் எடுத்ததாக கூறி, அவரது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குமாராசாமிக்கு வாரிசு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகர்சாமியின் மற்றொரு மகனான உதயகுமார் என்பவரும் வங்கியில் கடன் பெறுவதற்காக வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார். நாட்காட்டியில் இல்லாத தேதியான பிப்ரவரி 30ம் தேதி என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்ட வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி??

மேலும் அவருக்கான லோனும் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக உதய குமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வட்டாட்சியர் ஸ்ரீதர் பேசும் போது, உரிய விசாரணை நடத்தி சான்றிதழில் திருத்தம் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார். அரசு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது குறைக்கப்பட வேண்டும் என்பது அவசியமானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here