திருமணமான நடிகரை காதலிக்கும் லாஸ்லியா – ஹர்பஜன் போட்ட டிவீட்டால் பரபரப்பு!!

0
losliya
losliya

பிக்பாஸ் சீசன் 3யில் பங்குபெற்று பிரபலமான லாஸ்லியா மரியநேசன் தற்போது திருமணமான ஒரு நடிகரை காதலிப்பதாக ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாஸ்லியா மரியநேசன்:

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையிலுள்ள ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்று தமிழகத்திலும் பிரபலமடைந்தார்.

Losliya-And-Harbhajan’s-Pictures-From-‘Friendship’-Goes-Viral

‘பிரியமானவளே’ பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் ஆடிய டிடி – வைரலாகும் வீடியோ!!

இந்நிலையில் அவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார். ப்ரெண்ட்ஷிப் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் அவர்களும் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட் ஒன்று பரபரப்பாக வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் சதீசை டேக்   செய்து “நீ லாஸ்லியாவைதானே லவ் பண்றதா சொன்ன? என்று அவர் போட்டுள்ள டீவீட்டை பார்த்து பலரும் ஷாக் ஆகி விட்டனர். அது பிரெண்ட்ஷிப் பட ப்ரோமஷனுக்காக போட்ட ட்வீட் என்று பிறகு தான் தெரிந்தது. நடிகர் சதீசுக்கு திருமணமாகி சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here