தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை – ரவுடிகளை கணக்கெடுக்கும் காவல்துறை!!

0

தற்போது தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் ரவுடிகளை தற்போது போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்மரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மிக வேகமாக செய்து வருகின்றனர். தற்போது இந்த தேர்தலுக்காக சென்னையில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுக்க துவங்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த தேர்தலில் எந்த தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மட்டும் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றிந்தாலோ அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டு மறு வாக்குப்பதிவு நடத்திருந்தாலோ அல்லது குறைவான வாக்குகள் எங்கு பதிவாகியுள்ளதோ ஆகிய பகுதிகளை பதட்டமான வாக்குச்சாவடி பகுதிகளாக கருதுவர். மேலும் சில பகுதிகளில் குறிப்பிட்ட ஆதிக்கம், ரவுடி கும்பல் செயல்படும் இடங்கள் மற்றும் சமூக மோதல் ஏற்படக்கூடிய இடங்கள் ஆகியவற்றை பதற்றமானவையாக கணக்கெடுக்கப்படும்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கறதா பாஜக?? மாநில துணைத்தலைவர் விளக்கம்!!

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஓர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ரவுடிகளை கணக்கெடுக்கும் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலைமை தேர்தல் ஆணையர்கள் அறிவுறுத்தியபடியே போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here