IPL 2024: சென்னை vs ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!!

0
IPL 2024: சென்னை vs ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…, வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியாவில், IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை, அனைத்து போட்டிகளும், ஒவ்வொரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்று வருவதால், ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.  இந்த நிலையில் CSK அணி சேப்பாக்கத்தில் வரும் மே 12ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது வரும் மே 9ம் தேதி காலை 10.40 மணி முதல், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிக்கெட்டின் விலையானது ரூபாய் 1700 லிருந்து, ரூ. 2000, ரூ. 2500 மற்றும் ரூ. 6000 என படிப்படியாக உயர்ந்து உள்ளது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் www.insider.in மற்றும் PAYTM இணையதளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here