Sunday, May 5, 2024

ராஜமவுலி படத்தில் இருந்து அலியா பட் நீக்கமா?? – விளக்கம் கொடுக்கும் படக்குழு!!

Must Read

பாலிவுட்டில் அலியா பாட்க்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், ராஜமௌலி இயக்கவிருக்கும் ஒரு படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டாரா என்று கேள்விகள் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

சுஷாந்த் மரணம்:

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் அளித்தியது. அவர் தற்கொலைக்கு பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல் தான் காரணம் என்று அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினர். அதே போல் “நேபோட்டிசம்” என்று ஹாஷ்டாக் ஒன்றை ட்ரெண்ட் ஆக்கினார்.

dislikes for sadak 2 trailer
dislikes for sadak 2 trailer

இதன் மூலமாக பல முக்கிய பிரபலங்கள் பல படவாய்ப்புகளை இழந்தனர். இப்படி இருக்க நடிகை அலியா பட் நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். இதனால் பலரும் அவரை வெறுத்தனர். அவர் நடித்த “சடக் 2” என்ற படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதனை 1 கோடிக்கும் அதிகமானோர் டிஸ்லைக் செய்து இருந்தனர். இது போல் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

மாற்றாக பிரியங்கா?

தற்போது, அலியா பட் இயக்குனர் ராஜமவுலி இயக்கவிருக்கும் படமான “ஆர்.ஆர்.ஆர்” படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியானது. அதே போல் அந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.

ஒரே மாதத்தில் எடையை குறைக்கணுமா?? – அப்போ இத ட்ரை பண்ணுங்க!!

ராஜமெளலி படம்

முற்றிலும் வதந்தியான செய்தி:

அலியா பட் காட்சிகள் இன்னும் படமாக்க படாததால் கண்டிப்பாக அவர் நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியது. ஆனால், இது முற்றிலும் தவறான செய்தி என்று அலியா மறுத்துள்ளார். அதே போல் இது ஒரு வதந்தி என்றும் யாரும் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் தான் “ஆர்.ஆர்.ஆர்”. அந்த படத்தில் அலியா ஒரு கதாபாத்திரம் மட்டும் தான். அதனால், காரணங்கள் சொல்லி படக்குழு அவரை நீக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர், நெருங்கிய வட்டாரங்கள். அலியா நடிக்கும் மற்ற படங்கள் அளவுக்கு இதற்கு எதிர்ப்புகள் இருக்காது என்று கூறியுள்ளனர்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -