Saturday, May 4, 2024

‘நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை’ திரைப்பயணம் – தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்..!

Must Read

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல இயக்குனர் சந்தரசேகரின் மகனும் ஆன “தளபதி” விஜய் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

நடிப்பு துறை:

பிரபல இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பின்னணி பாடகி ஷோபனாவின் மகன் ஆவர். விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.

vijay
vijay

சிறுவயதில் இருந்தே துறைதுறையில் சாதிக்க விரும்பியதால் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். பின், தனது அப்பா வின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதிகமான ஆர்வத்தால் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார். அவர் தந்தையின் படங்களில் தான் நடித்தார் என்று சொன்னாலும் அவருக்கு திருப்பு முனையாக இருந்த படம் விக்ரமன் இயக்கிய “பூவே உனக்காக” என்ற படம் தான். இந்த படத்தின் மூலம் தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

பல திறமை படைத்த நாயகன்:

விஜய் நடிப்பில் மட்டும் சிறந்தவர் அல்ல. இவர் பல திறமை படைத்தவர். மிக சிறந்த பாடகர் அவர். இவரது பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டும் ரசிக்கும் படி அல்லாமல் அணைத்து தரப்பினரும் ரசிக்கும் படி உள்ளது.

vijay
vijay

மேலும், இவர் சிறந்த நடன கலைஞர் ஆவர். ஆரம்பகாலத்தில் தமிழ் திரையுலகில் மட்டும் ஜொலித்த விஜயின் படங்கள் இன்று அவர் நடிக்கும் படங்களுக்கு சர்வேதேச புகழ் உள்ளது. இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்:

இன்று “தளபதி” விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விஜயின் பிறந்தநாள் கொரோனா பொது முடக்கத்தால் இணைய தளங்களில் மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

new poster
new poster

டுவிட்டரிலும் #HappyBirthdayThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மாஸ்டர் பட குழு விஜயின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. கூடுதலாக ” தளபதியின் பிறந்தநாளைக்கு மாஸ்டர் பட போஸ்டர் இல்லாமல் எப்படி?” என்று கூறி வெளியிட்டு உள்ளனர். அந்த போஸ்டரில் “கொளுந்துங்கடா” என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு பரிசீலனை..!

நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -