மேலும் சில மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு – தமிழக அரசு பரிசீலனை..!

0
Lockdown
Lockdown

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

முழு முடக்கம்:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 19ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona lockdown
corona lockdown

தங்கத்தின் விலை புதிய உச்சம் – பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் அங்கு தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களின் கோரிக்கையை வைத்து மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here