Thursday, May 2, 2024

தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அல்லது நாளை தெரிவிப்பார் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தகவல்!!

Must Read

இந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை மக்களுக்கு ரஜினி தெரிவிப்பார் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அரசியல் பரபரப்பு:

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திராவிட மற்றும் பிற கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாவதற்கு காரணம் திராவிட கட்சிகள் இருந்தாலும் சொல்லும்படியாக எந்த ஒரு மிகப்பெரிய தலைவரும் இல்லை. இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று யார் தமிழகத்தின் அரியணையில் ஏற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நிலை இப்படி இருக்க, தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி இருவரும் இந்த தேர்தலின் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் ஹாசனை பொறுத்தவரை தேர்தல் குறித்த தெளிவான முடிவில் உள்ளார், அதே போல் கட்சி துவங்கி அதற்கான பணிகளிலும் இறங்கியுள்ளார். ஆனால், ரஜினிகாந்த் இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதற்கான ஆலோசனையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும், கட்சி துவக்குவது குறித்தும் ஆலோசித்தார்.

மக்கள் நிர்வாகி தகவல்:

இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “அவர் இந்த சூழலில் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். அவர் எங்களது கருத்துக்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டார்”

நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் – ஆலோசனை கூட்டத்தில் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்!!

“அவரது அரசியல் நிலை குறித்து நாளை அல்லது இன்று மாலை செய்தி வாயிலாக தெரிவிப்பார். அவர் எந்த முடிவினை அறிவித்தாலும் அதனை நாங்கள் முழுமனதாக ஏற்று கொள்வோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தால் அரசியல் வட்டாரத்தில் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 2) ராஜீவ் காந்தி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -