ஆரியை மறைமுகமாக தாக்கும் போட்டியாளர்கள் – கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் நடந்து வருகிறது. தற்போது நாமினேஷன் ப்ரோஸஸ் நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் சீசனில் நேற்றைய எபிசோடில் கமல் பலரது முகத்திரையை கிழித்தார் என்றே சொல்லலாம். முக்கியமாக சம்யுக்தா. பலரையும் கண்டபடி பேசிவிட்டு பொதுவாக தான் சொன்னேன் என்று மழுப்பி வந்தார். ஆரியை இதோடு இரண்டாவது தடவையாக சம்யுக்தா ‘வளர்ப்பு அப்படி’ என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இத்தனை நாட்களாக இதனை குறிப்பிடாமல் கமல் நேற்றைய எபிசோடில் கூறியிருந்தார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு குறும்படமும் போடப்பட்டது. இதில் சம்யுக்தா ஆரி சொல்லாததை சொல்லியதாக கூறி அவரை மரியாதை இல்லாமல் பேசியதும் அதில் காட்டப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஆரி இதனை சாதாரணமாகவும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு சம்யுக்தா இந்த வீட்டை விட்டு வெளியேறவும் செய்தார். அவர் வெளியேறியது போட்டியாளர்களை கண்கலங்க வைத்தது. ஆனால் மக்களின் கருத்து அவர் வெளியேற வேண்டும் என்பது தானே.

அதன் பிறகு அவர் கமலிடம் வீட்டில் இருந்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சனம் கமல் முன்பு விரைவாக எதையும் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டு விடுகிறார். ஆனால் மற்ற நேரங்களில் அவர் ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு பலரையும் எரிச்சலடையவும் செய்து வருவதை நாம் பார்க்கிறோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போ சனமும் கமல் முன்பு இப்படி நடிக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதற்கு சனம் மழுப்பவும் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசொடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பலரும் ஆரி, சனம், ரம்யா மற்றும் ஷிவானியை நாமினேட் செய்துள்ளனர். இதற்கு பலரும் ஆரிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். அர்ச்சனாவை எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here