Monday, April 29, 2024

செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

Must Read

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேர்வுகள் குறித்த விரிவான அட்டவணையினை கூடிய விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்த நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்து பொது முடக்கம் தளர்வுகளுடன் பின்பற்றி வருவதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்திலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்றும், தேர்வுகளை எழுதியும் வருகின்றனர். நடப்பு ஆண்டிற்காக மாணவர்களிடம் இருந்து கல்லூரி கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் தேர்வுகள் குறித்த ஓரு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் வெண்பா?? யார் காரணம் தெரியுமா?? பதட்டத்தில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நடப்பு ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதர மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் முடிந்த பிறகு தேர்வுகள் தொடங்கும் எனவும், தேர்வுகளுக்கான அட்டவணை விரைவாக வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -