தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

0
தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு பதிவு செய்யப்பட்டதில், “TNPSC-யில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலான தகுதியில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை நான்கு மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் இதுவரையிலும் TNPSC நிர்வாகம் செயல்படுத்தாமல் இருப்பதால், நேற்று (ஏப்ரல் 24) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த புதிய நடவடிக்கை மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இருந்தாலும் இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம் என TNPSC தரப்பில் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மே.8ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கு இப்படி தயாரானால் சுலபமாக தேர்ச்சி பெறலாம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here