Thursday, May 2, 2024

சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!

Must Read

“புரெவி” புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இவ்வாறாக உத்தரவிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புரெவி” புயல்:

“புரெவி” புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து பல இடங்களை கனமழை வெளுத்து வாங்குகின்றது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில், தற்போது வரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் வரை பலியாகியுள்ளதாகவும் அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பல குடிசை வீடுகள், ஒட்டு வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த முதல்வர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு சார்பில் வழங்கிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, குடிநீர், பால் பொருட்கள் வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மேலும், மக்களுக்கு தேவையான வகையில் நடமாடும் உணவகங்களை ஏற்பாடு செய்யவும், மக்களுக்கு சூடான உணவுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவிக்கையில் முதல்வர் இவ்வாறாக உத்தரவிட்டுள்ளதால் மக்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை தேவையானவற்றை மாநகராட்சி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை குடிசை பகுதிகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் இந்த திட்டம் மூலமாக 26 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -