Saturday, May 18, 2024

டிசம்பர் மாத ஊரடங்கில் என்னென்ன கூடுதல் தளர்வுகள்?? முதல்வர் தீவிர ஆலோசனை!!

Must Read

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக நாடும் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த மாத ஊரடங்கு வரும் நவ.30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் மேலும் சில தளர்வுகள் மற்றும் இத்தனை மாதம் மூடியிருந்த மெரினா கடற்கரையை மீண்டும் திறப்பது குறித்தும் நாளை ஆலோசனை நடத்திய பின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஆலோசனை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு. இதுவரை ஊரடங்கு 8 மாதங்களாக அமலில் இருந்துள்ளது. தமிழக அரசு அறிவித்த இந்த மாதத்திற்கான ஊரடங்கு வரும் நவ.30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

palanisami attend video conference
palanisami attend video conference

ஆகையால் அடுத்த டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு அமல்படுத்துவதை குறித்து நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை நாளை காலை 10 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறும். அந்த ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் சில தளர்வுகளை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய தளர்வுகள்

தமிழக அரசு ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் அரசு & தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பேருந்து மற்றும் ரயில் சேவைகள், மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படக்கூடிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் மற்றும் மால்கள் போன்றவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

marina beach
marina beach

ஆனால் பார்கள், மெரினா கடற்கரை, நீச்சல் குளம், பள்ளி மற்றும் கல்லூரி திறப்பது குறித்து இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. எனவே இது குறித்து நாளை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும் ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -