கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்களுக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!

0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் உடலை பார்க்கவும், இறுதி சடங்கு செய்யவும் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. வைரஸ் பரவிவிடும் என்ற காரணத்தினால் முன்பு எல்லாம் இறந்தவர் உடலை பார்க்க அனுமதிப்பதில்லை. தற்பொழுது, மக்களின் கோரிக்கையை ஏற்று கேரள அரசு சில தளர்வுகளை வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் உயிரிழப்பு:

கடந்த ஒரு வருடமாக உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல லட்சம் உயிர்களை பழி வாங்கியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வீட்டிற்குள் முடக்கி வைத்தது. ஏழை மக்களின் தொழில்கள் பறிபோனது. பல குடும்பங்கள் பசிக்கும், பட்டினிக்கும் ஆளாகினர். பல மருந்துகளை கண்டுபிடித்தாலும் உயிரிழப்பு இன்னும் குறையவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் சுலபமாக மற்றவர்களுக்கு பரவும் என்ற காரணத்தால் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது உறவினர்களுக்கு கொடுக்காமல் சுகாதார துறையை சார்ந்தவர்களே உடலை தகனம் செய்து கொண்டிருந்தார்கள். பல அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு கவசங்களை இறந்தவர்கள் உடலில் போர்த்தி, அதிக கிருமி நாசினிகளை தெளித்து, 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு புதைப்பது அல்லது தீயில் இட்டு எரித்து விடுவார்கள.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதில் பல சர்ச்சைகள் மக்களிடையே ஏற்பட்டுள்ளதால் கேரள அரசு மக்கள் கோரிக்கையை ஏற்று கொரோனாவால் பாதித்தவர் உடலை இறுதி சடங்கு செய்வதில் சில தளர்வுகளை விதித்துள்ளது. மத ரீதியான சடங்குகளை செய்யவும், உடலை சுத்தம் செய்யும்பொழுது புனித நீரை தெளிக்கவும், வெள்ளை துணி போர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு செய்வதற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். 2 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இறந்தவர் உடலை தொட்டு பார்க்கவோ, கட்டி அணைத்து அழவோ கூடாது என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களும், பிற நோயினால் பாதித்தவர்களுக்கும் பார்க்க அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here