16 வயது சிறுவன் உயிரிழப்பு எதிரொலி.. வனத்துறை வசம் மாறும் குற்றால அருவிகள்?? வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால், எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 16 வயது சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஆம் ஆத்மி பெண் எம்.பி.ஸ்வாதி மலிவால் தாக்குதல் விவகாரம்., புதிய வீடியோ வெளியீடு? அதிர்ச்சி தகவல்!!!

இதன் விளைவாக தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை விரைவில் வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here