Thursday, May 2, 2024

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

Must Read

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு:

இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரபட்டது. இதனை மத்திய அரசு அவசர சட்டமாக நிறைவேற்றியது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலையும் அளித்தார். இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி மற்றும் வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி ஒரு மனுவினை கொடுத்தனர். உயர்நீதிமன்றத்தின் தலைமை அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. விசாரணையின் போது கூறியதாவது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.

ரிசர்வ் வங்கி பதில்:

ஆனால், அதற்குள்ளாகவே இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், சட்டத்தை திருத்த கோரி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தற்கொலை – மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!

அதே போல் இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி கூறியதாவது, “மக்களின் நலன் கருதி தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தவும், முதலீட்டாளர்களின் நலனுக்காக தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது, இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு உரிமை இல்லை” என்று இவ்வாறாக தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -