Saturday, April 27, 2024

கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தற்கொலை – மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!

Must Read

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தினை கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் சண்டை:

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்தவர், செந்தில்குமார், கூலித்தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சுபிக்ஷா, கிஷாந்த் மற்றும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது என்று தெரிகிறது. நேற்று வீட்டில் மனைவி முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் இருந்தபோது எப்போதும் போல் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனால் கோபம் அடைந்த முத்துலட்சுமி வீட்டிற்கு அருகே உள்ள அரளி விதையினை எடுத்து அரைத்து குடித்துள்ளார். தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனை செய்து விட்டு அவர் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஷத்தின் வீரியத்தால் மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து அங்கிருந்தோர் கேட்கையில் தான் அரளி விதையினை உட்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை:

இதனால் அவரை அருகே உள்ள முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டார். அவரது மூன்று குழந்தைகளும் தற்போது குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

முத்துலட்சுமி மரணம் அடைத்த செய்தி அறிந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது மரணம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி லக்னோ.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27) ஏகானா மைதானத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -