Saturday, April 20, 2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

Must Read

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல் முதல்வரின் ஆலோசனை பெற்ற பின் தான் அது குறித்து கூற முடியும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா அச்சம்:

கடந்த மார்ச் மாதம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நலன் கருதி மத்திய அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் என்று அனைத்தும் முடங்கின. கொரோனா அச்சம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றபட்டு வருகின்றது. இந்த சூழலால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் அனுமதி அளித்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதற்கான விதிமுறைகளையும் விதித்து இருந்தது. நடப்பு கல்வி ஆண்டு துவங்கி பல மாதங்கள் நிறைவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

மத்திய அரசு பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து விட்ட நிலையிலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை முதல்வர் தலைமையில் தொடர்ந்து நடந்து வருகின்றது. கடந்த மாதம் உயர்கல்வி மாணவர்கள் பாடங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பள்ளிகளுக்கு வரலாம் என்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

சாத்திய கூறுகள் இல்லை:

ஆனால், அதனை முதல்வர் பழனிசாமி தற்போது நிறுத்தி வைத்து இருக்கிறார். இப்படி குழப்பமான சூழ்நிலை நீடிப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளையும் எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தள்ளிப் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படியாக இருக்க தற்போது அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் – பாரதிராஜா வேண்டுகோள்!!

ஆலோசனை முடிவில் செய்தியர்களிடம் கூறியதாவது,”தமிழகத்தில் தற்போது உள்ள சுழலில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். முதல்வரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” இவ்வாறாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -