நவராத்திரி மூன்றாம் நாள் – தீய குணங்களை நீக்கும் ‘சந்திரகாண்டா’ வழிபாடு!!

0
சந்திரகாண்டா   
சந்திரகாண்டா   

இந்தியாவில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் மூன்றாவது தினமான இன்று நமது தீய எண்ணங்களை அடியோடு ஒழிக்க சந்திர கண்டா அம்பாளை வழிபட வேண்டும். சந்திரக்கண்டா துர்க்கையை வழிபடும் முறையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சந்திரகாண்டா   

இந்த நவராத்திரியில் அம்பாளை மூன்று விதமாக பாவித்து வெவ்வேறு பெயர்களில் ஒவ்வொரு தினத்திலும் வழிபடுகிறோம். முதல் மூன்று தினங்கள் துர்கா தேவியை வழிபடுகிறோம். நம்மிடம் உள்ள தீய குணங்களை முழுமையாக அளிக்க இந்த விரதத்தை நாம் பின்பற்றுகிறோம். அசுரர்களை அழிக்க தோன்றியவர்கள் நவதுர்க்கைகள்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

நவராத்திரி
நவராத்திரி

இந்த நவதுர்க்கைகள் சிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்கள். ஒவ்வொரு நாளும் தாண்டவத்தில் இருந்து ஒவ்வொரு துர்கைகள் அவதரித்தார்கள். இவ்வாறு மூன்றாவது நாள் ஆடிய நடனத்தில் இருந்து பிறந்தவளே சந்திரகாண்டா. இந்த துர்க்கையானவள் தங்கம் போல ஜொலிஜொலிக்கும் உடலை கொண்டவள். இந்த துர்க்கை பத்து கரங்களில் சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜபமாலை, அபய, வரத முத்திரைகளுடன் சிங்கத்தில் அமர்ந்தபடி போருக்கு தயாரானவளாய் அமர்ந்திருப்பாள்.

இந்த சந்திரக்கண்டாவை வழிபடுவதற்கு முக்கிய காரணம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து மனதில் அமைதியை நிலைநாட்டுவதே. மேலும் நவராத்திரி தொடங்கி முதல் இரண்டு நாட்கள் பூஜையை தவற விட்டவர்கள் இந்த மூன்றாம் நாளில் கொலு வைத்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

சந்திரகாண்டா   
சந்திரகாண்டா

அம்மனை இன்று அலங்கரித்து பூக்கோலமிட்டு, மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் முக்கனிகளில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக படைத்து பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இந்த அம்பாளை நினைத்து தியானத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் மனது ஷாந்தி அடைந்து எதிர்மறை எண்ணங்கள் விலகி வாழ்க்கையில் முன்னேறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here