ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்?? அப்போ இதை படிங்க முதல்ல!!

0
office work
office work

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களை விட ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அதிகம். இந்த சூழ்நிலையில் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம்.

அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் விளைவு??

பொதுவாக பெரியவர்கள் அங்கே, இங்கே என்று அலையாமல் வேலை கிடைத்தால் நல்லது என்று கூறுவது வழக்கம். அலுவலக வேலையில் தான் பெரும்பாலானோர் விரும்பியும் சேருகின்றனர். ஏனெனில் அலைச்சலால் உடல் சோர்வு, உடல் வலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுகிறது. ஆனால் அதை விட ஆபத்தானது என்றால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது தான்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

office work
office work

இதனால் உடலில் பெரும் பாதிப்பை கூட ஏற்படுத்தி விடுமாம். ஒரே இடத்தில் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது உடலில் தசை பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உடலில் கலோரிகள் அதிகரிக்கப்படுகிறது. ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பதால் அதனை குறைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகிறது. மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. எலும்புகளும் வலுவிழந்து போகிறது. இதய நோய் வருவதற்கு கூட வாய்ப்புள்ளது என ஆய்வு கூறுகிறது.

office work
office work

இதனை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அதாவது அலுவலகத்தில் உங்களால் முடிந்த அளவு நடக்க முயற்சியுங்கள். அதாவது அடிக்கடி தண்ணீர் குடிக்க எழுந்திரிக்கலாம். மேலும் ஒரு நாளைக்கு 1 கிலோ மீட்டர் வரை நடக்க பழகுங்கள். இதனால் கலோரிகள் எரிவதற்கு வாய்ப்புள்ளது. இடைவெளி நேரத்தில் காபி, டீ குடிக்கும் நேரத்தில் உட்காந்திருக்காமல் நின்று கொண்டே அருந்துங்கள். உங்கள் அலுவலகங்களில் லிஃப்ட் பயன்படுத்தாமல் மாடிப்படியில் நடக்க பழகுங்கள். இவ்வாறு செய்து வந்தால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here