Friday, May 17, 2024

மழைக்கு இதமான காரசாரமான மிளகு சிக்கன் – எப்படி செய்றதுன்னு பாப்போம்!!!

Must Read

அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது சிக்கனை தான். சிக்கனை சிறும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. அதன் ருசிக்கே தனி பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பெப்பர் சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Chettinad-Pepper-Chicken-Steps-1
Chettinad-Pepper-Chicken-Steps-1

சிக்கன் 1/2 கி

இஞ்சி சிரியதுண்டு

பூண்டு 4 பல்

சீரகம் 2 தேக்கரண்டி

சோம்பு 2 தேக்கரண்டி

மிளகு 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் 2

வர மிளகாய் 2

பெரிய வெங்காயம் 1

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு மிளகு, சோம்பு, சீரகம் போன்றவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சேர்த்து வதக்கவும்.

pepper chicken
pepper chicken

அதன்பின் அதில் இஞ்சி, பூண்டு வரமிளகாய், பெரிய வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் சேர்த்து நன்கு வதக்கவும் அதன்பின் பச்சைமிளகாய் சேர்க்கவும். அதன்பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கழித்து இறக்கினால் பெப்பர் சிக்கன் தயார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -