தமிழகத்தில் செப்.,7 முதல் தனியார் பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

0
Private Bus
Private Bus

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். இந்நிலையில் சாலை வரி, வருமான இழப்பு உள்ளிட்ட காரணங்களால் 7ம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

பேருந்து இயக்கம்:

தமிழகத்தில் ‘அன்லாக் 4’ தளர்வு விதிமுறைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் மாவட்டத்திற்குள் பேருந்து இயக்கத்திற்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. மாவட்டம் விட்டு வெளியே பேருந்துகள் இயங்க அனுமதி இல்லாத காரணத்தால் தனியார் பேருந்துகள் இயங்காது என உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். இதனால் செப்.,1 முதல் அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணியர் ரயில் சேவை செப்., 7 முதல் தொடங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக ஆம்னி பஸ்கள் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் 7ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ஹேக்கர்கள் கைவரிசை!!

கொரோனா ஊரடங்கால் பேருந்து இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டதால் கடுமையான வருமான இழப்பு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சாலை வாரியாக 2.5 லட்ச ரூபாய் மற்றும் 5 மாதங்களாக இயங்காத பேருந்துகளை அதன் உரிமையாளர் இயக்க 2 லட்ச ரூபாய் தேவைப்படும். பஸ்களை இயக்க விருப்பம் இருந்தாலும் இயக்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே முதல்வர் இதில் தலையிட்டு காலாண்டு வரிகள் ரத்து உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here