மீண்டும் குறைந்த தங்கம் & வெள்ளியின் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

0

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்பும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோரும் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

சர்வதேச அளவில் இதுவரை இல்லாத அளவு வர்த்தகத்தை முடக்கியது கொரோனா பரவல். இதனால் பல தொழில்துறைகள் கடும் நஷ்டத்திற்கு ஆளானதால், நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கின. இந்த காரணத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். கொரோனா தாக்கத்தின் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் திரும்பியது. இதனால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரத்தையும் தாண்டியதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். உலகளவில் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்பும் நாடுகளில் இந்தியாவிற்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால் மற்ற நாடுகளில் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் முக்கிய ஆபரண பொருளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் தங்க நகைகள் இன்றி முழுமை அடையாது.

தமிழகத்தில் செப்.,7 முதல் தனியார் பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

இந்த கடுமையான விலையேற்றம் மக்களை கவலையடைய நிலையில் கடந்த 2 வாரங்களாக அதன் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ரூபாய் குறைந்து ரூ. 4,877க்கும், ஒரு சவரன் 272 ரூபாய் குறைந்து ரூ. 39,016க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 1600 ரூபாய் சரிந்து ரூ. 73,300 ஆகவும், ஒரு கிராம் 1.6 ரூபாய் குறைந்து ரூ. 73.30 ஆகவும் விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here