Monday, May 6, 2024

நடிகர் சுஷாந்த் மரணத்தில் புதிய திருப்பம்!! காதலி மீது புகார்!!

Must Read

பிரபல நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணத்தில் திடீர் திருப்புமாக அவரது முன்னால் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

தந்தையின் புகார்

கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவில் ஓயாத கொரோனா அலை!! ஒரே நாளில் 49000 புதிய நோய் தொற்றுகள்!! அதனை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நண்பர்கள் என பலரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

அவரது தற்கொலை சினிமா துறையில் உள்ள சிலரின் ஆதிக்கத்தால்தான் நிகழ்ந்தது என கூறப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்தின் தந்தை பாட்னா காவல்நிலையத்தில் சுஷாத்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபர்த்தி மீது புகார் கொடுத்து உள்ளார்.

புகார் விவரம்:

சுஷாந்த் தந்தையின் புகாரில் 2019 வரை தனது மகன் நன்றாக இருந்ததாகவும் நல்ல படங்கள் செய்ததாகவும், ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகனை பண ரீதியாக ஏமாற்றி துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், ரியா ஐரோபாவில் நடந்த அவரது படப்பிடிப்பிற்கு விமான சீட்டு தவிர அதற்கு உண்டான அனைத்து செலவினங்களும் சுஷாந்த் பார்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

சுஷாந்தின் கிரெடிட் கார்டு ஐரோப்பியாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் IPC பிரிவுகள் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 341 (தவறான பயன்பாடு), 342 ( தவறான வாக்குமூலம்), 380 (வீட்டில் திருடுதல்), 406 (நம்பிக்கை துரோகம்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) என பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புரியாத புதிர்

சுஷாந்தின் மரணத்தின் காரணம், ஒவ்வொருவரால் ஒவ்வொருவிதமாக கூறப்படுகிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் அவரது தந்தையின் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரியா சக்ரபர்த்தி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை குறிப்பிட்டு, இந்த கொலைவழக்கில் தக்க தீர்வு எடுக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -