Thursday, May 9, 2024

 வந்தாச்சு ஸ்மார்ட் ஹெல்மெட் – இனி செம ஸ்பீடாக கொரோனா பரிசோதனை..!!

Must Read

கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளை எளிமையாகவும் , வேகமாககவும் பரிசோதனை செய்வதற்கு புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மும்பை முதலிடம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். அதுலயும் மும்பைலதான் அதிகபட்ச பாதிப்பு காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மும்பையில் 1,05,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இறப்பு எண்ணிக்கையை குறைக்க  முதலில் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும்,  விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக  ஸ்மார்ட் ஹெல்மெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் ஹெல்மெட்டின் பயன்கள்

ஸ்மார்ட் ஹெல்மெட்டின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 6,000 பேருக்கு பரிசோதனைகள் செய்கின்றனர். முன்னதாக உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 300 பேர் வரை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இப்போது ஸ்மார்ட் ஹெல்மெட்கள் வருகையால் பரிசோதனைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் உடல் வெப்பநிலையை கணக்கிடும் தெர்மல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே யாருக்கெல்லாம் உடல் வெப்பநிலை அதிகம் இருக்கிறதோ, அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவர்.

               Smart helmet

Smart helmet

     அரைகுறை ஆடையில் சுற்றி திரிந்த ஷிவானி – தூக்கி எறிந்த சீரியல்..!

இந்தியாவில் அறிமுகம்

துபாய், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் இந்த ஹெல்மெட்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மேலும் பல பகுதிகளுக்கு ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்பாட்டை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் விலை ரூ.6 லட்சம்!! என்பது குறிப்பிடத்தக்கது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த ஹெல்மெட்கள் மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -