Sunday, May 19, 2024

யம்மியான “பீட்ரூட் அல்வா” – வீட்டிலேயே செய்யலாம்..!!

Must Read

சத்தான காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட முரண்டு பிடிப்பர். அவர்களை சாப்பிட வைக்க எளிய வழி அவற்றை ஒரு நல்ல ஸ்வீட் ஆக மாற்றி கொடுப்பதே. இன்று சத்தான மற்றும் டேஸ்ட்டி ஆன “பீட்ரூட் அல்வா” செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் – 2
  • நெய் – தேவையான அளவு
  • பால் – 1 கப்
  • முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை – தேவையான அளவு
  • கண்டென்ஸ்ட் மில்க் – விரும்பினால்
  • ஏலக்காய் பொடி – சிறிது அளவு

செய்முறை:

Beetroot Halwa
Beetroot Halwa
  • எடுத்துக்கொண்ட பீட்ரூட்டை நன்றாக கழுவி விட்டு துருவி வைத்து கொள்ளவும்.
  • அதனை ஒரு சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவி வைத்த பீட்ரூட்டை போட்டு கிளறவும். அதனை அடிபிடிக்க விடாமல் பார்த்து கொள்ளவும்.
  • கொஞ்சம்கொஞ்சமாக பால் சேர்த்து கிளறவும்.
  • இதற்கு நடுவில் வேறு ஒரு சட்டியில் நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை இவற்றை வறுத்து வைத்து கொள்ளவும்.
  • நாம் செய்து வாய்த்த கலவையில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.
  • கடைசியாக, ஏலக்காய் பொடி மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் (விரும்பினால்) சேர்த்து கொள்ளலாம். சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!!

பயன்கள்:

Beetroot
Beetroot

பீட்ரூட் நாம் உடம்பில் ரத்த அளவை அதிகரிக்கிறது. இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இன்றைய மாடர்ன் உலகில் குழந்தைகள் அதிகமாக மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அதனால் அவர்கள் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பீட்ரூட் கண்களுக்கு குளிர்ச்சியையும், பாதுகாப்பையும் அதிகரிக்கிறது. இந்த சுவீட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -