மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா..! உலக தூக்க தினமான இன்று வடிவேலுவின் மீம் அட்வைஸ்..!

0

தூக்கம் என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் பலர் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். தூக்கத்தைப் பற்றியும், தூங்கும் முன்பு உண்ண வேண்டிய உணவுகள் குறித்தும் நாம் இன்று தெரிந்து கொள்வோம்.

சிறந்த தூக்கத்திற்கு உகந்த உணவுகள்:

இரவு நேரத்தில் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். எனவே பாதாம் இரவு தூக்கத்திற்கு உகந்த பொருள். அதையடுத்து பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். அதேபோல் வெள்ளை சாதம், வால்நட்ஸ், செர்ரி பழங்கள், மீன் வகைகள் போன்றவை இன்சொமேனியாவை குணப்படுத்தும்.

அதேபோல் பாலில் வெள்ளைப்பூண்டை தட்டி போட்டு கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். எலுமிச்சை சாறும் தூக்கத்திற்கு உகந்தது.

எவன் ஒருவன் இரவில் நிம்மதியாக தூங்குகின்றானோ அவனே பணக்காரன். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவர். ஆனால் சிலருக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் தூக்கம் வராது. அதைத் தவிர்க்க நாம் கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் பலன் கிடைக்கும்.

தினமும் குறைந்தது 6 மணிநேர உறக்கம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here