Sunday, May 19, 2024

காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் – ஐ.சி.சி அதிகாரப்பூர்வ தகவல்!!

Must Read

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகளில் இனி பெண்களின் கிரிக்கெட் அணியும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆண்களின் அணியும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமன்வெல்த் போட்டிகள்:

காமன்வெல்த் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த போட்டிகள் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாக கருதப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5000 இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

காமன்வெல்த் விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுக்களை இயக்கி நடத்துகிறது. இந்த போட்டிகள் 1930 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இங்கிலாந்தின் பராமிங்காமில் எட்டாவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் முதல் முறையாக பெண்கள் டி-டுவெண்ட்டி கிரிக்கெட் அணி இடம் பெற உள்ளது. அதே போல் 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆண்கள் டி-டுவெண்ட்டி கிரிக்கெட் அணியும் பங்கேற்கவுள்ளன. இந்த செய்தியினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து உறுதி செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காமன்வெல்த் போட்டிகளில் தரவரிசை பட்டியலில் உள்ள அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. தற்போது இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து அணி உட்பட மொத்தமாக 7 அணிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தகுதிச்சுற்று நடைபெற உள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை அதிகாரி மனு சானே கூறுகையில் “பெண்கள் அணி காமன்வெல்த் போட்டிகளில் இடப்பெறுவது வளர்ச்சிக்கு மிகவும் ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -