Thursday, April 25, 2024

எளிய முறையில் உடல் எடை குறைக்க உதவும் சாதம்!!

Must Read

உடல் எடையை குறைக்க மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யும் எளியமுறை உணவான வெண்பூசணி தயிர் சாதத்தின் செய் முறையும் அதன் பயன்களும் இங்கே.

வெண்பூசணி தயிர் சாதம்:
தேவையானப் பொருட்கள்

விதைகள் அகற்றி துருவி வைத்த வெண்பூசணி ஒரு கப், துருவிய கேரட் ½ கப், 2 பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன், 15 கருவேப்பிலை , ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் ஜீரகம், 1 ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் ½ கப் தயிர்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் ½ ஸ்பூன் கடுகு மற்றும் ½ ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அதனுடன் , துருவிய கேரட், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு, துருவிய வெண்பூசணியை சேர்த்து கிளறி விடவும். வெண்பூசணியில் தண்ணீர் இருப்பதனால், தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா?? ஐந்து நிமிடங்கள் நன்கு வதங்கிய பின், அதனை வேறு பாத்திரத்தில் மாற்றவும். நன்கு ஆறிய பின், தயிரை சேர்த்து கலக்கினால் சுவையான வெண்பூசணி தயிர் சாதம் தயார்.

மருத்துவப் பயன்கள்

இத்தனை எளிமையான சுவையான உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த வெண்பூசணி இரத்தத்தை சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது.

இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்தக்கசிவு தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். மேலும் வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் இந்த வெண்பூசணி உதவுகிறது. இது நுரையீரல் நோய், நீரிழிவு, வாந்தி, தலைசுற்றல் நீக்கவும் பயன்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -