Thursday, April 25, 2024

1.4 லட்சம் புதிய இடங்களைச் சேர்த்து இருக்கும் AICTE – 2020 கல்வியாண்டிற்கான தரவு பட்டியல்..!!

Must Read

இன்ஜினியரிங் படிப்புகளுக்காக புதிதாக 1.4 லட்சம் இடங்களை (எஐசிடிஐ)தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் இன்று இந்த வருடத்திற்கான இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டது.

தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்:

பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து தற்போது தான் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், குறிப்பிடும்படி இருப்பது என்னவென்றால், பழைய கல்வி நிறுவனங்கள் பொறியியல், மேலாண்மை மற்றும் மற்ற பட்டபடிப்புகளுக்கான இடங்கள் 1.5 லட்சம் ஆக குறைந்து உள்ளது, அதே சமயம், புதிய கல்வி நிறுவனங்கள், 1.4 லட்சம் என இடங்களை ஒதுக்கி உள்ளது.

“சமமாக தான் உள்ளது”

இது மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க உயர்த்தப்பட்டு உள்ளது. குறைக்கபட்டு உள்ளதும், உயிர்த்தப்பட்டு உள்ளதும் கிட்டத்தட்ட 10,000 இடங்கள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ளது. இன்று தான் அகில இந்திய கவுன்சில் தனது வரும் வருடத்திற்கான தரவு பட்டியல் மற்றும் ஒப்புதல்களை அளித்து உள்ளது.

ஒதுக்கப்பட்ட இடங்கள்:

அதில், 30,88,512 இடங்கள் 9,691 கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன என்பது தெரிகிறது. இந்த ஆண்டு சேர்க்கைகளை தொடங்க 39,656 இடங்களைக் கொண்ட 164 புதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ஒப்புதல் செயல்முறை முந்தைய ஆண்டுகளில் இருந்து பல எண்ணிக்கையில் இருந்து கணிசமாக விளக்கியுள்ளது என்று AICTE தெரிவித்து உள்ளது.

காப்பீடு இருந்தால் கட்டணம் இல்லை – அரசு அதிரடி

engineering seats 2020
engineering seats 2020

மேலும், 2016 ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த AICTE அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -