சிவக்குமார் மடியில் விஜய், சூர்யா – அப்போவே என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா சிறுவயதிலேயே அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய், சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய், சூர்யா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார். அப்படி தற்போது வரை ஜொலித்து கொண்டிருக்கும் பிரபலங்கள் பலர். அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய், சூர்யா தான். விஜய்க்கு தமிழ்நாடு முழுக்க பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் பல அதிரடி படங்களிலும், அரசியல் ரீதியான படங்களில் நடித்து வருவதால் அவரது ஸ்டைலுக்கும் டான்ஸுக்கும் பல ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். சூர்யாவிற்கும் அதே போல தான். அவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். சூர்யா-ஜோதிகா போல ஒரு ஜோடி உண்டா என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.

என்ன தான் சூர்யா, விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நண்பர்கள் தான். ஒரே கல்லூரியில் படித்தவர்களும் கூட. மேலும் இருவரின் ஒற்றுமையை பாராட்டும் விதமாக பல நிகழ்ச்சியில் அவரகள் தங்களது ஆழமான நட்பை வெளிப்படுத்தி கொண்டு தான் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் மாஸ்டர் பட குத்தாட்டம் – வேற லெவலில் வைரலாகும் வீடியோ!!

அப்படி இருக்க தற்போது சிவக்குமார் மடியில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அரிய புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here