“குக் வித் கோமாளி” கனியின் ‘பால் பூரி’ ரெசிபி – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

குழந்தைகள் முதல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்றால், பூரி போன்ற பதார்த்தங்கள் தான். இன்று நாம் பொதுவாக செய்யும் பூரி போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக “பால் பூரி” ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • பால் – 1/2 கப்
  • பிரெஷ் கிரீம் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • பானி பூரி அப்பளம் – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – 3 டீஸ்பூன்
  • நட்ஸ் (முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை) – தேவையான அளவு
  • தேங்காய் பால் – 1/2 கப்
  • வெல்லம் – தேவையான அளவு
  • நெய் – 4 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், இரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக சுண்ட வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்து வந்ததும், அதில் ஏலக்காய் தூள், பிரெஷ் கிரீம், தேங்காய் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின், இதனை நன்றாக கொதிக்க வேண்டும். சற்று கெட்டியானதும் அதனை ஆற வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள பூரி அப்பளத்தை பொரித்து வைத்து கொள்ள வேண்டும். அதே போல் இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில், எடுத்து வைத்துள்ள நட்ஸை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின், ஒரு தட்டில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிண்டி கொள்ள வேண்டும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் மாஸ்டர் பட குத்தாட்டம் – வேற லெவலில் வைரலாகும் வீடியோ!!

பின், ஒரு பூரியை எடுத்து அதனை சிறிதாக உடைத்து கொள்ள வேண்டும். பின், அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மிக்ஸ், பால் கலவை சேர்த்து ரெடி செய்து கொள்ளலாம். அவ்ளோ தான்!!

யம்மியான “பால் பூரி” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here