Saturday, April 27, 2024

இந்தியாவில் இருந்து தான் கொரோனா பரவியது – பழிசுமத்தும் சீன விஞ்ஞானிகள்!!

Must Read

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவியது தான் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது என்று பல நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தியது. இந்நிலையில் இன்று சீன விஞ்ஞானிகள் மோசமான சுகாதார நிலை கொண்டுள்ள இந்தியாவிலிருந்து தான் இந்த கொரோனா பரவியது என்று பழி சுமத்தியுள்ளனர்.

சீனா மறுப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இந்த கொரோனாவிற்கு உலகம் முழுவதும் 6.28 கோடி மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

china people
china people

அதில் 14.63 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பு ஆர்மபித்த காலத்தில் பல நாட்டினர் கொரோனா வைரஸ் வூஹானில் உள்ள சீன ஆய்வகத்திலிருந்து தான் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது என்று சீனா மீது குற்றம் சாட்டினர். ஆனால் வூஹானில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் உண்மையான வைரஸ் இல்லை என்று சீன விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா மீது பழி சுமத்தும் சீனா

இத்தகைய கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவவில்லை என்று மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தியாவில் உள்ள தூய்மையற்ற சுகாதார அமைப்பின் மூலம் பரவி இருக்கும் என்று சீன விஞ்ஞானிகள் இந்தியா மீது பழிசுமத்தியுள்ளனர். மேலும் சீன விஞ்ஞானிகள் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விலங்குகளின் மூலம் அல்லது சாக்கடை தண்ணீர் மூலம் மனிதனுக்கு பரவி இருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தினர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

scientist in china
scientist in china

இவர்கள் இந்தியாவை மட்டும் குறை சொல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, செர்பியா மற்றும் கிரீஷ் ஆகிய நாடுகளில் இருந்து பரவி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.  இதற்கு பிரிட்டன் விஞ்ஞானி டேவிட் ராபர்ட்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத்தேர்வு., சிபிஎஸ்இ-க்கு மத்திய அரசு உத்தரவு!!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-24ஆம் கல்வியாண்டின் வாரியத் தேர்வு (பொது தேர்வு) முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -