Friday, May 3, 2024

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை – கவலையில் மக்கள்!!

Must Read

மாதத்தின் முதல் நாளான இன்று தங்க விலை சற்று உயர்ந்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து தங்க விலை அதிகரித்து வருவது மக்களை சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தொடர்ந்து உயர்ந்த விலை நிலவரம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்க உத்தரவால் பல தொழில்துறைகளும் முடங்கியது. இதனால் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு சரிவினை சந்தித்தது. இதனால் தொழில்துறை முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வந்தனர். இதனால் பொது முடக்க காலத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தங்க விலை 43 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பின், அடுத்தடுத்த நாட்களில் விலை சற்று குறைந்து ஆறுதலை அளித்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மீண்டும், மாதத்தின் முதல் நாளான இன்று சற்று உயர்ந்துள்ளது மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

இன்றைய விலை:

இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து சவரன் 38,600 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4,825 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கம் 1 கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து 5,069 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 கிராம் 40,520 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

ஐபிஎல் 2020: KXIP vs MI – 2வது வெற்றியை பெறப்போகும் அணி எது??

gold rate
gold rate

இது இப்படி இருக்க வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி 63.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி 63,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை நிலவரங்களால் மக்கள் கவலை அடைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -