நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

0

அக்டோபர் 2 (நாளை) நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி ஒரு நாள் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தனியார் ஹோட்டல்களில் உள்ள பார்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைகள்:

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள் அடுத்த சில மாதங்களில் திறக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கடைகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மதுவுக்கு அடிமையானவர்கள் போதைக்காக சானிடைசர், கள்ளச்சாராயம் குடித்து உயிரை விட்ட சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றதால் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஊரடங்கிற்கு முன் மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு நேரத்தில் காலை 10 மணிக்கே திறக்கப்படுகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

TASMAC Sales
TASMAC Sales

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை – கவலையில் மக்கள்!!

இதனால் தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுகிறது. அரசுக்கும் வருவாய் அதிகரிப்பதால் பல எதிர்ப்புகளையும் மீறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கடுமையாக பின்பற்றப்பட்டாலும் போகப்போக விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி நாளை காந்தி ஜெயந்தியை ஒட்டி வழக்கம் போல ஒரு நாள் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் தனியார் ஹோட்டல், கிளப் போன்றவற்றில் உள்ள மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here