Thursday, May 9, 2024

ஏன் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்க கூடாது?? நீதிபதிகள் கேள்வி!!

Must Read

தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் செயல்பட அனுமதி அளித்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இதனை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது, “தற்போது தான் பல கட்ட பொது முடக்கத்திற்கு பின் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதே போல் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக தான் கொரோனா பரவலும் ஒரு அளவுக்கு குறைந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருப்பது முறையான ஒன்றாக இருக்காது. கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் வரும் சூழல் தான் ஏற்படும். அரசு 50 சதவீத பேருந்துகள் இயங்க தான் அனுமதி அளித்துள்ளது”

நீதிபதிகள் யோசனை:

“முறையாக, தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைவர். இப்படியாக ஒரு புறம் சிரமம் இருக்கும் என்றால் மறுபுறம் இன்னும் பல பள்ளிகள் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக தான் செயல்பட்டு வருகின்றது. அப்படி செயல்படாமல் இருந்தாலும் இன்னும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு கொரோனா பரவும் அச்சம் உள்ளது. இவ்வாறாக சூழல் தமிழகத்தில் நிலவி வருவதால் தமிழக அரசின் திறப்பு அறிவிப்பினை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.

“மோசடி மன்னன்” காசியிடம் இருந்து 1000 ஆபாச வீடியோக்கள் மீட்பு – போலீசார் தொடர் விசாரணை!!

இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, “மனுவில் கூறப்பட்டது போல் பல சவால்களை மாணவர்கள் சந்திக்க நேரிடும். அதே போல் பல நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் அலையினை ஆரம்பித்துள்ளது. அதே போல் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை தமிழக அரசு டிசம்பரில் ஏன் திறக்க அனுமதிக்க கூடாது?” என்று கேட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -