அரசு வேலை கிடைக்க “சூரியபகவான்” வழிபாடு – ஆன்மீக விளக்கம்!!

0

வேலை கிடைக்கவில்லை என்று கவலையா!! நாம் என்ன செய்தால் வேலை கிடைக்கும்? நமக்கு எது சரியாக இருக்கும்? என்று முதலில் சிந்திக்க வேண்டும். வேலை கிடைக்காமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா? அதற்கென்று சில பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை, சரியாக செய்தலே போதும் உங்களை தேடி வேலை வரும்.

வேலை கிடைப்பதற்கான பரிகாரங்கள்:

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வேலை என்பது இன்றியமையாதது. “உத்தியோகம் புருஷ லட்சணம்” என்பார்கள். ஆண்கள் வேலைக்கு செல்வதும் பெண்கள் வீட்டை கவனிப்பதும் தான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதற்கான தகுதியை நாம் முதலில் வளர்த்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜாதகத்தில் சூரிய திசை அமைப்பு கண்டிப்பாக இருந்தால் தான் நமக்கு வேலை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, நமக்கான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். சனிக்கிழமையன்று அனுமன் மற்றும் பைரவரை வழிபட வேண்டும். அனுமனுக்கு வெற்றிலை மாலையும், பைரவருக்கு 27 மிளகு ஒரு துணியில் கட்டி இலுப்பை எண்ணையில் விளக்கு போட வேண்டும்.

சூரிய பகவான்:

சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிறு. காலை 6 – 7 மணி அளவில் வீட்டின் மேல் அல்லது வெட்ட வெளியில் கிழக்கு திசையை பார்த்த படி நின்று, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, நைவேத்தியம் (நாட்டுச்சர்க்கரை அல்லது பொங்கல்) படைக்க வேண்டும். சூரிய பகவானுக்கு உரிய மந்திரத்தை படிக்க வேண்டும்.

அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள், அரசு வேளையில் இருந்துகொண்டு பதவி உயர்வுக்காக முயற்சிப்பவர்கள், ஆளுமை திறன் கூடுவதற்கும், தந்தை மகன் உறவு மேம்படவும், அதிகாரம் பெறவும், அரசு சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சூரிய பகவானை வழிபட வேண்டும். மேலும், கண் கோளாறு போன்ற அனைத்து வகையான கண் பிரச்சனைகளுக்கும் சூரிய பகவானை வழிபடலாம். இதற்கு, கீழே கொடுக்கபட்டுள்ள மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.

“காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி”

சூரிய காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச
ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here