ஒரு ஆம்பளைய தட்டிக்கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு?? வனிதாவை கிழித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!!

0
lakshmi ramakrishnan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல எதிர்ப்பாராத சம்பவங்கள் நடந்தேறியது. இந்நிலையில் ரவீந்தர், வனிதா என பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவியூ கொடுத்து வருவது நமக்கு தெரியும். கோர்ட் டாஸ்கில் பாலாஜி சனம் அவர்களை இழிவாக பேசியதை கண்டித்து பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் வனிதாவும் பாலாஜியை கண்டபடி பேசினார். இதனை எதிர்த்து இதையெல்லாம் பேச வனிதாவுக்கு தகுதி உள்ளதா?? என்பது போல பேசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

வனிதா

வனிதா பீட்டர் பால் இடையே ஏற்பட்ட தகராறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் பிரிந்ததற்கான காரணமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பிரிவையும் தாண்டி வனிதா தற்போது அவரது சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ரிவியூ செய்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரின் முகத்திரையையும் கிழித்து வந்தார். போன வாரம் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் பற்றி பெட்டிஷன் எழுத வேண்டும்.

அதில் பாலாஜி சனம் பற்றி கேவலமாக சொல்லி இருந்தார். அதாவது அட்ஜஸ்ட் செய்து தான் இவ்வளவு தூரம் வந்திருப்பதாக கூறினார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு வனிதாவும் பாலாஜியை அவன் பொறப்புல தான் தப்பு இருக்கு. பிக் பாஸ் வீட்டிக்கு போனேனா அவனை செருப்பாலேயே அடிப்பேன் என்று கணடபடி பேசி இருந்தார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கு பதிலடி தரும் விதத்தில் பேசி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vanitha and bala

அதாவது லட்சுமி ராமகிருஷ்ணன் 40 வயதில் நடிக்கப்போவதாக கூறியபோது அவரது மாமனாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லையாம். ஏன் என்று கேட்டதற்கு அந்த துறையில் உள்ள பெண்கள் தப்பானவர்களாக தான் இருப்பார்கள் என்று கூறினாராம். ஆனால் அது எல்லாம் கிடையாது, நான் நடித்து அவார்ட் வாங்கும்போது உங்களையும் அழைத்து செல்கிறேன் என்று கூறினாராம் லட்சுமி.

ஆனால் துரதிஷ்ட வசமா ஒரு பெண்ணோட வாயில நானே போயி சிக்கிக்கிட்ட மாறி ஒரு விசயத்துல மாட்டிகிட்டேன். மானம் தான் உயிர்னு வாழ்ந்த என்கிட்ட தகாத வார்த்தைகளை சொல்லி கேவலப்படுத்தி பேசிட்டா. அப்போ எங்க மாமா சொன்னது தான் என் நியாபகத்துக்கு வந்துச்சி. இந்த அளவுக்கு இருக்கவங்க எப்படி ஒரு பையனை தட்டி கேட்க முடியும். அதுக்கு என்ன தகுதி இருக்க முடியும். இவ்வாறு நேரடியாகவே வனிதாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here