Saturday, May 18, 2024

“மோசடி மன்னன்” காசியிடம் இருந்து 1000 ஆபாச வீடியோக்கள் மீட்பு – போலீசார் தொடர் விசாரணை!!

Must Read

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த மோசடி மன்னன் காசியிடம் இருந்து தற்போது 1000 ஆபாச வீடியோக்கள் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 1 பெண் இவர் மீது புகார் அளித்துள்ளார்.

மோசடி காதல் மன்னன்:

இணையத்தில் பல ஆண்கள் தங்களது பொழுது போக்கிற்காக பெண்களை பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பல பெண்களை இணையம் வழியாக காதலில் விழ வைத்த மோசடி மன்னன் காசி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த காசி என்பவர் மீது சென்னையினை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்களை இணையம் வழியாக காதல் என்ற பெயரில் அவர் ஏமாற்றியதாகவும், ஆபாச படங்களை எடுத்து மிரட்டியதாகவும் அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லட்சுமி ராமகிருஷ்ணன் – ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!!

இவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 5 பெண்கள் அவர் மீது புகார் அளித்தனர். இதன் காரணமாக போலீசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பலர் இவருக்கு உதவி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இப்படியாக இவர் மீது 6 பெண்கள் புகார் அளித்தததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதே போல் இவருக்கு உதவி செய்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

1000 வீடியோக்கள் கண்டுபிடிப்பு:

அதில் பல தடயங்கள் அழிக்கப்பட்டதால் காசியின் தந்தையும் கைது செய்யப்பட்டார். காசியின் நண்பர்களான தினேஷ், ஜினோ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது காசி பெண்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

kasi - the sex fraud
kasi – the sex fraud

இவரிடம் இருந்து ஆபாச வீடியோக்களை பெற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இப்படியான நிலையில் மேலும் ஒரு பெண் இவர் மீது புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -