Wednesday, May 8, 2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!!

Must Read

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறாக நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா பரவலால் முடக்கம்:

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் ,மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என ஈரோட்டில் பொங்கல் பரிசு விநியோகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை நவம்பரில் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. எனினும் பள்ளிகளை திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஜனவரியில் பள்ளிகளை திறக்கப்போவதாக தகவல்கள் வந்தது. ஆனால் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

ஒரு சில இடங்களில் மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பறவை காய்ச்சல் பரவி வருவது உறுதி – மாநில வனத்துறை அமைச்சர் பேட்டி!!

அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடமும் இந்த வார இறுதியில் கருத்துக்கள் கேட்கப்படும். சுகாதாரதுறை அறிவிப்பின்படி பள்ளிகளில் மாணவர்கள் இடைவெளி விட்டு அமரும் வகையில் தயாராக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படும். பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கூடுதலாக, பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி வகுப்புகள் நடைபெறாது மற்றும் அதற்குரிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் தெரிவித்தார் .

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த சஞ்சு சாம்சன்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 56 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -