தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக் பணியாளர்களை தேர்வு செய்வது ஏன்?? ஐகோர்ட் கிளை கேள்வி!!

0

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு மினி கிளினிக் என்னும் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இந்த மினி கிளினிக்கிற்கான பணியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்து வருகின்றனர். தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மினி கிளினிக்:

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு மினி கிளினிக் என்னும் திட்டம் துவங்கப்பட்டது. மக்களின் அடிப்படை மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக் தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் துவங்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. தற்போது மதுரை வளர்நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழக அரசு துவங்கியுள்ள மினி கிளினிக் என்னும் திட்டத்திற்கு தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்களை தேர்வு செய்கின்றனர் இது முறையானதா??

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்கள் இந்த மினி கிளினிக்கிற்கு தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்கின்றனர். இதனால் முன்பதிவு, இனசுயற்சி முறை, வேலைவாய்ப்பு போன்றவை முறையாக பின்பற்றவில்லை. மேலும் தற்போது உள்ள கொரோனா சூழலில் அனுபவமுள்ள மருத்துவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த தனியார் ஏஜென்சி மூலம் அனுபவம் இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது சரியா?? எனவே தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யும் திட்டத்தை சுகாதாரத்துறை ரத்து செய்ய வேண்டும்” என்று சந்தோஷ் தனது வழக்கில் கூறியுள்ளார்.

யாஷ் பிறந்தநாளில் கே.ஜி.எப் 2 டீஸர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தோஷ் மற்றும் ஆனந்தி, “மினி கிளினிக்கிற்கு தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்வது ஏன்? தற்காலிக முறையில் மருத்துவர்களை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் இது குறித்து அரசு வழக்கறிஞர் நாளை பதில் கூறப்படுவதாக கூறியுள்ளார். எனவே இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here