டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா??

0

வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுடனான மத்திய அரசின் 7 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது.

தொடர்ந்து நடக்கும் போராட்டம்:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்,, ஹரியானா,உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் டெல்லியின் எல்லைப்பகுதியினை ஆக்கிரமித்து தொடர்ந்து 44வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடத்தபட்ட 5 கட்ட பேச்சு வார்த்தைகளில் சமரசம் எதுவும் எட்டப்படாத நிலையில் கடந்த 30ம் தேதி 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்!!

அப்பேச்சுவார்த்தையின் முடிவு தங்களுக்கு சாதகமாக இல்லையென்றால் போராட்டமும், காலவரையற்ற உண்ணாவிரதமும் தொடரும் என்று விவசாய குழுக்களின் தலைவர்கள் தெரிவித்தனர். எனினும் கூட 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று மீண்டும் 7ம் கட்ட பேச்சுவார்த்ததை துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லையெனில் மத்திய அரசுக்கெதிராக பிரம்மாண்டமான பேரணி நடத்தப்படுமென்று விவசாய குழுக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக்குழுவின் தலைவர்களும் மத்திய அரசின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here