யாஷ் பிறந்தநாளில் கே.ஜி.எப் 2 டீஸர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் ஜனவரி 8 ம் தேதி வெளியீடு என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் நடிகர் யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ம் தேதி இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எப்-2

கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான K.G.F கன்னட திரைப்படம் வசூல் சாதனை செய்தது. ஆக்க்ஷன் திரை படமாக வெளிவந்த K.G.F கன்னடம் தவிர பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. இது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பெரிதாக கவரப்பட்ட திரைப்படமாக வெளிவந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கான இரண்டாம் பாகமாக K.G.F -2 படமாக்கப்பட்டு வந்தது. மேலும் இப்படம் 2021 ம் ஆண்டில் வெளியாகும் எனவும் அறிவிப்புகள் வந்தது. இப்படத்தின் கடைசி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் யாஷ் அவர்களின் பிறந்தநாளான ஜனவரி 8 ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என இயக்குனர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நிஜமாகவே K.G.F படத்தின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.

‘கோவிஷீல்டு தடுப்பூசி 110 சதவீதம் பாதுகாப்பானது’ – மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு துறை!!

இத்திரைப்படத்தில் யஷ் உடன் சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீனா தாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். 80 கோடி செலவில் உருவான ‘K.G.F -1’ திரைப்படம் சுமார் 250 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிட தக்கது. மேலும் இப்படம் கன்னடம் , தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய சினிமா விருதுகளையும் பெற்றுள்ள இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here