3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

0

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் மற்றும் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மலை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுறம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

05.01.21 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் ஓர் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு பெய்யக்கூடும் என்றும் ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

06.01.21 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், தேனீ, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் ஓர் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.01.21 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.01.21 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகை – ரஜினியுடன் சந்திப்பு!!

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுமாக இருக்கும்.

திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு பகுதிகளில் தலா 6 மீமீ, அதிராமபட்டினம், பரங்கிப்பேட்டை, அறந்தாங்கி, திருப்பூண்டி,ஆகிய பகுதிகளில் தலா 4 மீமீ, வேப்பூர், செய்யுர், திருவாடானை, மணல்மேல்குடி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் தலா 3 மீமீ, வந்தவாசை, இல்லயான்குடி, காரியாபட்டி, உசிலம்பட்டி, ஜெயன்கொண்ட, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 2 மீ மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here