மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகை – ரஜினியுடன் சந்திப்பு!!

0

பிஜேபி யின் மூத்த தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் ஜனவரி 14 ம் தேதி சென்னை வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையை குறித்து சந்தித்து பேச போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமித்ஷா ரஜினிகாந்த் சந்திப்பு

கடந்த நவம்பர் 21 ம் தேதி சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மீண்டும் ஜனவரி 14 ம் தேதி சென்னைக்கு வர உள்ளார். வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடை பெறப்போகும் சூழ்நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடை பெற்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த நவம்பர் 21 ல் அமித்சா சென்னை வந்த போது தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக கட்சி உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியாக இணையப்போவதாக அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்துக்கள் வெளிவராத சூழ்நிலையில் அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் என்ன விதமான சூழ்நிலைகள் உருவாகும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையை குறித்து விசாரிக்க நேரில் சந்திக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி – குஷியில் ரசிகர்கள்!!

கடந்த சில தினங்ளுக்கு முன்பு உயர் ரத்த அழுத்த காரணமாக மருத்துவமயில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள அவர் தான் இனி எந்த கட்சியும் ஆரம்பிக்க போவதில்லை என அறிவிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நவம்பர் வருகையின் போது, GO BACK AMITSHAH மற்றும் TN welcomes CHANAKYA போன்ற ஹாஷ்டாக்குகள் சமூக வலை தளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here