‘ஸ்டாலின் முதலில் அவரது குடும்ப பிரச்னையை தீர்க்கட்டும்’ – அமைச்சர் உதயகுமார் பேட்டி!!

0

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை மக்களுக்கு வழங்கும் விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , அதிமுக அல்ல திமுக அரசு தான் உடையும் என கூறியுள்ளார்.

‘அதிமுக அல்ல திமுக அரசு தான் உடையும்’

அதிமுக அரசியலில் ஏற்பட்ட சலசலப்புகள் கொஞ்சமேனும் குறைந்துள்ள நிலையில், திமுக அரசியலில் புது புது பிரச்சனைகள் உண்டாகி கொண்டிருக்கிறது. இது குறித்து மதுரை மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு கொடுக்கும் விழாவில் கலந்து கொண்ட அதிமுக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது ‘அதிமுக இரண்டாக உடையாது. திமுக தான் இரண்டாக உடையும். ஸ்டாலின் முதலில் தனது குடும்ப பிரச்சனையை சரி செய்யட்டும்” என்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், ”அதிகார சண்டை அவரது குடும்பத்தில் உள்ளது. முதலில் அவர் அவரது குடும்ப சண்டையை சரி செய்யட்டும். சண்டையை சரி செய்வதற்க்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும்” எனவும் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றி அவர் கூறியதாவது, ”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதை பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துளோம்.

3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

மேலும் அந்நாளில் எம்.ஜி.ஆர் இன் பிறந்தநாள் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அவர்களின் வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டு நடை பெறும் ” எனவும் கூறினார். மேலும் ”7.5 சதவித இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. முதல்வர் அறிவித்த பின்பு தான், அதுகுறித்து ஸ்டாலின் உரிமை பாராட்டுகிறார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை ” எனவும் அவர் பேசினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here